business

img

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.33.50 குறைவு!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் 19 கிலோ வணிக  பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.1,665.00 லிருந்து ரூ.1,631.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,769.00 லிருந்து ரூ.1,735.50 ஆகவும், மும்பையில் ரூ.1,616.50 லிருந்து ரூ.1,583.00 ஆகவும், சென்னையில் ரூ.1,823.50 லிருந்து ரூ.1,789.00 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
அதே சமயம், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.